1997 ஆம் ஆண்டு ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம் நீருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கடந்த 21-5-2010 அன்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் இரண்டாம் தாரக் குடிமக்களாக நடத்தப்படுவது போல் நீதித்துறையிலும் முஸ்லிம்களின் உரிமைகள் மீதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.
கடுமையான குற்றச்சாட்டால் கைது செய்யப்படுவோர் முஸ்லிமாக இல்லாவிட்டால் சில மாதங்களிலேயே அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர்.
காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட எத்தனையோ குற்றவாலிகள் சில மாதங்களில் ஜாமினில் வெளியே வந்துள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் சமுதயாத்தின் முக்கிய பிரமுகராக இருந்து கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபாவுக்கு ஜாமின் வழங்கிட தொடர்ந்து நீதிமன்றம் மறுத்து வந்தது.
12 ஆண்டுகளாக குணங்குடி ஹனீபா சட்ட ரீதியாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப் போயின.
குற்றமற்றவர் என்று இப்பொழுது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருடைய 12 ஆண்டு காலத்தை திருப்பிக் கொடுக்குமா?
பொய் வழக்கில் கைது செய்த கருணாநிதியும் அவரது அதிகாரிகளும் திருப்பிக் கொடுப்பார்களா?
12 ஆண்டு சிறை வாசத்தில் தனது இளமையையும் ஆராக்கியத்தையும் இழந்து தனிமனித சுதநத்திரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டது போல் இவர்களுக்கு ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்வார்களா?
குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ஹனீபா கைது செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் பட்ட துயரம் போல் கருணாநிதியின் குடும்பத்துக்கும் நீதிபதிகளின் குடும்பத்திற்கு ஏற்பட்டால் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்று இவர்கள் நினைத்து பார்க்க வேண்டாமா?
குணங்குடி ஹனீஃபாவை ஜாமினில் விடக் கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பல வருடங்களாக குரல் எழுப்பி வந்தன.
தமழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த தேர்தல் முடிந்த பின் துனை முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து குணங்குடி ஹனீபாவை ஜாமினில் விடுங்கள் என வழியுறுத்தியது.
ஜாமின் மனு போடச் சொல்லுங்கள் அரசு தரப்பில் ஆட்சேபினை தெரிவிக்க மாட்டோம் என ஸ்டாலின் உறுதியளித்தார். இதை நம்பி குணங்குடி ஹனீபா ஜாமின் மனு தாக்கல் செய்த போது அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததால் கடைசி ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
திமுக வின் இந்த பச்சைத் துரோகம் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக வுடன் இருந்த நல்லுறவை அன்றோடு துண்டித்துக் கொண்டது.
இது குறித்து கடுமையான தலையங்கம் உணர்வில் எழுதப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்க்ள.
அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து வகையிலான முட்டுகட்டைகளை போட்ட போதும் பொய் வழக்கு என்பதால் குணங்கு ஹனிஃபா விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.
ஒரு வேளை அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூட அவர் சிறையில் கழித்த 12 ஆண்டுகளை விட குறைவாகவே தான் தண்டனை வழங்கப்பட்டிக்கும் என்பதை நினைக்கும் போது குணங்குடி ஹனிபாவிற்கு எத்தகைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குணங்கு ஹனீபா அவர்கள் விடுதலை செய்பட்டு வரும் போது அனைத்து இயக்கத்தினரும் வரவேற்க வந்த போது தவ்ஹீத் ஜமாஅத் ஏன் வரவில்லை என்று சிலருக்கு தோன்றலாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐ பொருத்தவரை வரவேற்பு கலாச்சாரத்தை ஏற்றக் கொள்வதில்லை.
ஜவாஹிருல்லாஹ் வெளிநாட்டில் இருந்து வந்த போது வரவேற்பு சுவரொட்டி ஒட்டியதும் பிரிவினைக்கு ஒரு காரணமாக அமைந்தது அனைவருக்கும் தெரியும்
பி.ஜே அவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்ட போது மலேசிய தூதரகத்தை முற்றுகையிட மக்கள் அழைக்கப்பட்டு மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டனா.
முற்றுகையிட வந்த மக்கள் பி.ஜே விடுதலை செய்யப்பட்டதை கேள்வி பட்டு உடனே விமானம் நிலையம் வந்தனர்.
அப்போது பி.ஜே யும் ஐந்து மாநில நிர்வாகிகளும் வெளிநாட்டில் இருந்ததால் இதை தடுக்க முடியவில்லை
இது பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த போது இனி எதிர்காலத்தில் இது போன்ற வரவேற்பு நிகழச்சிகள் நடக்காமல் கவணமாக இருப்போம் என்று நிர்வாகத்தின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்
வரவேற்பு அளிக்கும் கலாச்சாரத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதால் குணங்குடி ஹனீபாவையும் வர வேற்கச் செல்ல வில்லை என்பதை கூறிக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment